கொட்டாவ தர்மபால வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஆறு மாணவர்களிடம் கொரோனா வைரஸ் தொற்றினை கண்டறியும் எண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையம் இதனைத் தெரிவித்துள்ளது.
குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் ஐந்தாம் தரத்தினைச் சேர்ந்த 4 மாணவர்களும் எட்டாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களும் அதில் உள்ளடங்குவதாக தேசிய செயற்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இலங்கையிலுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று (திங்கட்கிழமை) மீளவும் திறக்கப்பட்டுள்ளன.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான முன்னைய சுற்றறிக்கைக்கு அமைய அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.