கொரோனா தொற்று அதிகரித்துச் செல்லும் நிலையில் சுவிட்சர்லாந்து கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தத் தொடங்கியுள்ளது.
உணவகங்கள் மற்றும் வெளிப்புற செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள அதேவேளை சில பல்கலைக்கழகள் மீண்டும் தொடங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளன.
மேலும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கும் வரை உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் திரையரங்குகளை திறக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு காணப்பட்டாலும் தடுப்பூசி திட்டம் துரிதப்படுத்தப்படுவதால் கட்டுப்பாடுகளை தளர்த்தும் தீர்மானம் நியாயமானது என அரசாங்கம் கூறுகிறது.