ஒக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா கொவிட் -19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் மே முதல் வாரத்திலிருந்து வழங்கப்படுமென ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.
மேலும் கொவிட் -19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸினை செலுத்துவதற்கு தேவையான தடுப்பூசிகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியா கூறிய அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி ஒரு மில்லியன் டோஸினை வழங்குவது தொடர்பாக எந்தவொரு நேர்மறையான பதிலும் இதுவரை வழங்கப்படவில்லை என அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் பொது மேலாளர் தினுஷா தசநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.