2025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) நினைவூட்டியுள்ளது.
இதன்படி, கூட்டிணைந்த வரி (CIT), பங்குடமை வருமான வரி (PIT) மற்றும் தனிநபர் வருமான வரி (IIT) ஆகியவற்றுக்கான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 30 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.
எனவே, வரி செலுத்த வேண்டியவர்கள் குறித்த காலக்கெடுவுக்கு முன்னதாகத் தங்களது வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்கத் தவறுவோருக்கு அபராதங்கள் விதிக்கப்படக்கூடும் எனவும் திணைக்களம் எச்சரித்துள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தினால் இந்த நினைவூட்டல் விடுக்கப்பட்டுள்ளது.














