டிலுக்ஷா
ஐரோப்பிய ஒன்றியத்துடன் அண்மையில் எட்டப்பட்டுள்ள நெருக்கமான உறவுக்கான உடன்படிக்கை, சாதாரண மக்களுக்கும் நன்மையளிக்கும் என பிரதமர் அன்டி பே(ர்)னாம் (Andy Burnham) தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இந்த உடன்படிக்கை தொடர்பில் பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியினரும் பல்கலைக்கழக நிர்வாகிகளும் கவலை வெளியிட்டுள்ளனர்.
பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் தமது கார்பன் வெளியேற்ற வர்த்தகத் திட்டங்களை ஒன்றிணைக்க இணங்கியுள்ளன. இதன் மூலம், இரு தரப்பினரும் ஏனைய தரப்பின் கார்பன் வரிகளைச் செலுத்த வேண்டிய நிலை தவிர்க்கப்படும்.
எனினும், இந்த நடவடிக்கையால் எரிவாயு மற்றும் எரிபொருள் கட்டணங்கள் கணிசமாக அதிகரிக்கக்கூடும் என கன்சர்வேட்டிவ் கட்சி எச்சரித்துள்ளது. சிறிய ரக வாகனமொன்றுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு மேலதிகமாக 6 பவுண்ஸ்களும், பெரிய வீடுகளுக்கு ஆண்டுதோறும் 125 பவுண்ஸ்களும் செலவாகலாம் என அக்கட்சி மதிப்பிட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சியின் கணிப்புகள் முற்றிலும் தவறானவை எனத் தெரிவித்துள்ள அரசாங்கப் பேச்சாளர், இந்த உடன்படிக்கை வர்த்தகச் செலவுகளைக் குறைத்து நுகர்வோருக்குப் பயனளிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.













