சுகாதார வழிகாட்டுதல்கள் கடுமையாக பின்பற்றப்படாவிட்டால் பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், பொறுப்பான முறையில் செயற்படத் தவறியமை மற்றுமொரு கொத்தணிக்கு வழிவகுக்கும் என தொற்றுநோயியல் பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
எனவே கொரோனா தொற்று பரவுவது குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என்றும் அனைத்து நேரங்களிலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அவ்வாறு செய்யத் தவறினால் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கும், பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் தடைப்பட வழிவகுக்கும் என்றும் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
மேலும் கொரோனா தொற்று அறிகுறி கொண்டவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லுமாறும் அவர்கள் சமூகத்துடனான தொடர்பினை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.