தமிழ்நாட்டில் இன்று 10 ஆயிரத்து 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளது.
அத்தோடு மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இதனை அடுத்து தமிழகத்தில் பதிவகைய மொத்த இறப்பு எண்னிக்கை 13 ஆயிரத்து 205 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது மருத்துவமனையில் 79 ஆயிரத்து 804 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்றும் மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை தமிழ்நாட்டில் போதுமான அளவில் கொரோனா தடுப்பூசி மருந்துகள் கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதிதாக மேலும் 6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகம் வந்துள்ளன என்றும் தமிழ்நாட்டில் தடுப்பூசி தடையின்றி செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.