கொவிட்-19 தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட பின்னர் தாங்கள் குறைவாக விமானப் பயணம் செய்ய விரும்புவதாக கிட்டத்தட்ட 60 சதவீத பெரியவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வைரஸின் புதிய வகை மறுபாடுகளின் அச்சத்துக்கு மத்தியில், பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
விமானத் துறையில் நீண்டகால தாக்கத்தை ஆராய்ந்ததில், இது தொற்றுநோயால் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகியுள்ளது.
எதிர்வரும் 2020ஆம் ஆண்டு விமான பயண தூரம் 2019ஆம் ஆண்டு ஏப்ரலை விட 94 சதவீதம் குறைவாக இருந்ததாக சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 500 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், பதிலளித்தவர்களில் 57.7 சதவீதம் பேர் எதிர்காலத்தில் குறைவாக அல்லது மிகக் குறைவாக விமான பயணம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், 76.9 சதவீதம் பேர் கொவிட்-19 குறித்த கவலைகள் விமான பயணத்தைத் தடுக்கக்கூடும் என்று கூறியுள்ளனர்
குறைவாக விமான பயணத்தைத் மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் பதிலளித்தவர்களில் 73.1 சதவீதம் பேர் 60 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்கள் ஆவர்.