இந்தியாவில் நான்காவது கொரோனா தடுப்பூசி எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினர் வைத்தியர் பால் தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசியின் இரண்டு கட்ட சோதனைகள் நிறைவடைந்த நிலையில், அதன் முடிவுகள் மத்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர்களிடம் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் பயோடெக்னோலஜி துறையுடன் சேர்ந்து உருவாக்கப்படும் இந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை நடவடிக்கை விரைவாக ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே கொவிஷீல்ட் மற்றும் கொவேக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.