ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ, சுகயீனம் காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை), எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ் நாணயக்கார ஆகியோர் நேரில் சென்று, அவரின் நலன் குறித்து விசாரித்துள்ளனர்.
ஆளும் தரப்பினருக்கும் எதிர்த் தரப்பினருக்கும் இடையில் கடும் முரண்பாடுகள், கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்றிருந்த நிலையில் மறுநாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.