இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொண்ட அஸ்ட்ராஜெனகா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளபோதிலும், அவை எதிர்வரும் ஜீன் மற்றும் ஜுலை மாதங்களில் காலவதியாகிவிடும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் கொவிட் தடுப்பூசி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார் .
கொவிட் பரவல் தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது லலித் வீரதுங்க மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த ஜனவரி 29 ஆம் திகதி முதல் கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதோடு இதுவரையில் 9 இலட்சத்து 25,242 பேருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்குவதற்கு தற்போது கையிருப்பில் உள்ள அஸ்ட்ராஜெனகா தடுப்பூசிகள் போதுமானதல்ல.
இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையால் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதில் சற்று கால தாமதம் ஏற்பட்டுள்ளதோடு அஸ்ட்ராஜெனகா தடுப்பூசிகள் மாத்திரமின்றி சீனோபார்ம் , ஸ்புட்னிக் பைசர் உள்ளிட்டவை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது” என அவர் கூறியுள்ளார்.