மக்களின் பாதுகாப்பில் சமரசம் செய்ய அரசாங்கம் தயாராக இல்லை என போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
தனியார் பேருந்து உரிமையாளர்கள் புதிய சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றத் தவறினால், பொலிஸார் மற்றும் சுகாதார அதிகாரிகள் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என கூறினார்.
மேலும் அவர்களுக்காக குறைந்த வட்டியுடன் கூடிய கடன் வசதிகள் மற்றும் பல கட்டண குறைப்பு உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இன்னும் மேலதிகமாக சலுகைகளை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் காமினி லொக்குகே கூறினார்.
தனியார் பேருந்து உரிமையாளர்கள் வழிகாட்டுதல்களை மீறுவதற்கும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கம் அனுமதிக்காது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.