1915 ஆம் ஆண்டில் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டதை ஒரு இனப்படுகொலை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் அறிவித்துள்ளார்.
நவீன கால துருக்கியின் உருவாக்க காரணமாக அமைந்த ஒட்டோமான் பேரரசு வீழ்ச்சியுற்ற காலகட்டத்தில் இந்த கொலைகள் இடம்பெற்றன.
இந்த அட்டூழியங்களை துருக்கி ஒப்புக் கொண்ட போதும் “இனப்படுகொலை” என்ற வார்த்தையை நிராகரித்தது.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் முடிவை துருக்கி “முற்றிலுமாக நிராகரிக்கிறது” என வெளிவிவகார அமைச்சர் மெவ்லட் கவுசோக்லு நேற்று சனிக்கிழமை தெரிவித்தார்.
மேலும் தங்கள் வரலாறு குறித்து தாங்கள் யாரிடமிருந்தும் பாடம் எடுக்கப் போவதில்லை என்றும் டுவிட் செய்துள்ளார்.
இதனை அடுத்து துருக்கிய வெளிவிவகார அமைச்சு அங்காராவின் வலுவான எதிர்ப்பை வெளியிடும் முகமாக அமெரிக்க தூதுவரை சந்திக்கவுள்ளது.
நேட்டோ நட்பு நாடான துருக்கியுடனான உறவுகளை முறிவடைய செய்யும் என்ற காரணத்தினால் கடந்த அமெரிக்க அரசாங்ககங்கள் இனப்படுகொலை என்ற வார்த்தையை முறையான அறிக்கைகளில் பயன்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.