இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகின்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் இந்திய பயணிகளின் போக்குவரத்து நடைமுறையில் புதிய கட்டுப்பாடுகளை ஜேர்மன் விதித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக ஜேர்மன் நாட்டின் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளதாவது, “இந்திய பயணிகளின் போக்குவரத்து நடைமுறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.
இதற்கு காரணம் எங்களது தடுப்பூசி பிரசாரம் போலியாக அமையாமல் இருப்பதற்கே இத்தகைய செயற்பாட்டை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம்.
இதற்கமைய இந்தியாவில் இருந்து வருகைதரும் ஜெர்மனிவாசிகளுக்கு மாத்திரமே நாட்டுக்கு நுழைவதற்கு அனுமதி வழங்கப்படும்.
குறித்த நடைமுறை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை முதல் அமுலுக்கு கொண்டுவரப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.