நேபாளத்தின் முன்னாள் அரசர் மற்றும் அரசி, கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நேபாளத்தின் முன்னாள் அரசர் ஞானேந்திர ஷா மற்றும் முன்னாள் அரசி கோமல் ஷா, அவருடைய மகள் பிரேரணா ஷா ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டனர்.
இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை) காத்மண்டுவிலுள்ள நார்விக் சர்வதேச வைத்தியசாலையில் கொரோனாவுக்கான சிகிச்சையை பெற்றுக்கொள்ளுவதற்காக, தங்களது மகளுடன் அவர்கள் சேர்ந்துள்ளனர்.
இதேவேளை குறித்த மூவரின் உடல்நிலை சீராகவே உள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டு மீண்டும் நாடு திரும்பிய நிலையிலேயே அரசருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.