மகாராஷ்டிரா மாநிலம் தனேவில் உள்ள வைத்தியசாலையில், ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
அவசர சிகிச்சைப் பிரிவில் தீ வேகமாக பரவியுள்ள நிலையில், அங்கு சிகிச்சைப் பெற்ற வந்தவர்களே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த 20 பேர் மீட்கப்பட்டு வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது. அந்தவகையில் நேற்று ஒரேநாளில் 66 ஆயிரத்து 358 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொத்தமாக 44 இலட்சத்து 10 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் குறித்த மாநிலத்தில் மாத்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்காரணமாக அம்மாநிலத்தில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள், மற்றும் ஒக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில் மேற்படி தீ விபத்து போன்ற சம்பவங்களும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.