நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சடுதியாக அதிகரித்து வருகின்றமைக்கு சுகாதார அமைச்சே பொறுப்பேற்க வேண்டுமென சுகாதார வைத்திய ஆய்வுக்கூட நிபுணர் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார வைத்திய ஆய்வுக்கூட நிபுணர் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் இவ்விடயம் தொடர்பாக மேலும் கூறியுள்ளதாவது, “பி.சி.ஆர்.பரிசோதனைகளை குறைப்பதன் ஊடாக கொரோனா வைரஸை அரசாங்கம் கட்டுப்படுத்தியது.
குறித்த அரசாங்கத்தின் செயற்பாட்டு விளைவே நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ளது. ஆகவே கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்தமைக்கான பொறுப்பை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்.
மேலும் குறித்த தொற்று நாடு முழுவதும் சடுதியாக பரவி வருகின்றமையினால், அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக சிறந்த செயற்றிட்டங்களை அரசாங்கம் விரைந்து முன்னெடுக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.