இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகின்ற சூழலில் மேற்கு வங்க மாநிலத்தில் இறுதி கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.
இது கொரோனா தொற்றின் தற்போதைய சூழ்நிலைகளை மேலும் தீவிரமாக்கக்கூடும் என நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
குறித்த மாநிலத்தில் கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் 17 ஆயிரத்திற்கும் அதிகமான கொவிட் வழக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், இனிவரும் காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகின்றது.
ஏற்கனவே ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று நிறைவடைந்துள்ள நிலையில், இதில் சில இடங்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் குறித்த தேர்தல் பிரசார காலப்பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட பேரணிகளில் கலந்துகொண்ட பலர் கொரோனா வழிமுறைளை முறையாக பின்பற்றவில்லை எனவும் குற்றஞ்சாட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.