நாட்டில் கொரோனா தொற்று அச்சநிலையைத் தொடர்ந்து மத வழிபாட்டுத் தலங்களில் ஒன்றுகூடல் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு மறு அறிவிப்பு வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வழிபாட்டு தலங்களில் ஒரேநேரத்தில் ஆகக் கூடியது 25 பக்தர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொரோனா பரவலையடுத்து கொழும்பு தேசிய நூதனசாலை இரண்டு வாரங்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நூதனசாலையின் சில ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக காலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.