2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஒரு இலட்சத்து 94 ஆயிரத்து 297 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதிபெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இம்முறை மூன்று இலட்சத்து 62 ஆயிரத்து 824 பேர் பரீட்சை எழுதிய நிலையில், அவர்களில் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றவர்கள் 64.39 வீதமாகும்.
அத்துடன், பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 86 பேருடைய பெறுபேறுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பரீட்சைப் பெறுபேறுகளை மீள் பரீசீலனை செய்வதற்கான விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பு பின்னர் வெயிடப்படவுள்ளது.