கிளிநொச்சி மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் பணிமனையில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பி.சி.ஆர். பரிசோதனை முடிவு இன்று (செவ்வாய்க்கிழமை) கிடைக்கப்பெற்ற நிலையில் அவருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
குறித்த பணியாளார் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே தொற்று உறுதிசெய்யப்பட்டதாக கிளிநொச்சி மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர், மருத்துவர் என்.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
குறித்த பணியாளர், அண்மையில் கொழும்பு மாவட்டத்திற்குச் சென்று திரும்பியிருந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.