தமிழக மீனவர்கள் 86 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட நிலையில், கொரோனா தொற்று நிலையை அடுத்து எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு, பாம்பன் பகுதிகளில் இருந்து வந்த நாட்டுப் படகு மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதுடன் 11 நாட்டுப் படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியிருந்தனர்.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துவருவதால் மீனவர்களிடம் இருந்த மீன்பிடி உபகரணங்களை மட்டும் பறிமுதல் கடற்படையினர், 30 மணிநேரத்திற்கு பின்னர் நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை) நடுக்கடலில் வைத்து அவர்களை எச்சரித்து விடுவித்துள்ளனர்.
இதன்போது, மீனவர்களின் படகுகளில் இருந்த ஜி.பி.எஸ் கருவிகள், மீன்பிடி வலைகள், நங்கூரம் உள்ளிட்டவற்றை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழக அரசு மீன்பிடித் தடைக்காலம் அறிவித்துள்ளதால் மீன்பிடி விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாததால் அதிகளவு நாட்டுப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட நிலையில், கொரோனா தொற்று நிலையை அடுத்து எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.