இலங்கையால் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்புட்னிக்-வி (Sputnik-V) தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் திட்டம் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இன்று (புதன்கிழமை) இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, கொழும்பு கொதட்டுவைப் பிரதேசத்தில் 30 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு ஸ்புட்னிக் தடுப்பூசியின் முதலாவது ஊசி செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதி கடந்த மூன்றாம் திகதி இரவு இலங்கையை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கையில் அஸ்ட்ரா செனேகாவின் கொரோனா தடுப்பூசியின் முதலாவது ஊசி இதுவரை ஒன்பது இலட்சத்து 28 ஆயிரத்து 107 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது தடுப்பூசி இதுவரை ஒரு இலட்சத்து 40 ஆயிரத்து 721 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.