சீனா தாயாரிப்பான சினோபார்ம் (Sinopharm) கொரோனா தடுப்பூசி அடுத்தவாரம் முதல் நாட்டு மக்களுக்கு செலுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் அதிகம் பதிவாகும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைத் தெரிந்தெடுத்து, அந்த மக்களுக்கு சினோபார்ம் தடுப்பூசியை செலுத்துவதற்குத் பெற்றுக் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனா அரசாங்கத்தால் இலங்கைக்கு இலவசமாக ஆறு இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு சினோபார்ம் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்காத நிலையில், அதனை மக்களுக்குச் செலுத்துவதற்கு நாட்டில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த தடுப்பூசி நாட்டில் வசிக்கும் சீனர்களுக்கு மாத்திரம் செலுத்தப்பட்டது.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதைத் தொடர்ந்து சினோபார்ம் தடுப்பூசியை செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.