திருகோணமலையில் இடம்பெற்ற கோரவிபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
டிப்பர் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே இன்று(சனிக்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டிப்பரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.















