இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் பாதிக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 672 பேரில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, இந்தக் காலகட்டத்தில் கொரோனா தொற்றினால் கொழும்பில் 755 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 180 பேர் கெஸ்பேவையிலும் 180 பேர் பிலியந்தலையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேநேரம், கம்பஹா மாவட்டத்தில் 323 பேருக்கும் களுத்துறை மாவட்டத்தில் 234 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், கண்டி மாவட்டத்தில் 127 பேருக்இரத்தினபுரி மாவட்டத்தில் 192 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது.
அத்துடன், பொலன்னருவை மாவட்டத்தில் 118 பேருக்கும் காலி மாவட்டத்தில் 228 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.