சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியின் முதல் அளவை வழங்க மேல் மாகாணத்தில் 40க்கும் மேற்பட்ட தடுப்பூசி மையங்கள் நிறுவப்பட்டுள்ளன என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன்படி, தடுப்பூசியின் முதல் டோஸ் 30 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தலா பத்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் கம்பஹா மாவட்டத்தில் 15க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன எனவும் கூறப்படுகிறது.
இருப்பினும் கொழும்பில் கூடுதலாக ஐந்து மையங்கள் நிறுவப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஒரு நாளைக்கு சுமார் 25,000 தடுப்பூசிகளை செலுத்த அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.
வைரஸ் பரவல் மற்றும் அந்தந்தப் பகுதிகளில் பதிவுசெய்யப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்பு விகிதங்களையும் கருத்திற்கொண்டு ஏனைய மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தடுப்பூசி திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் தொடங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.