கொரோனா தடுப்புத் திட்டத்தை ஒருங்கிணைக்க 9 மாகாணங்களும் 9 சுகாதார சேவை பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனங்கள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, கொவிட் தடுப்புத் திட்டத்தைக் கண்காணிக்க அனைத்து மாகாணங்களுக்கும் சென்று தேவையான வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு குறித்த பணிப்பாளர்களுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.