ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி தளத்தில் இஸ்ரேலிய படையினருக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே புதிய மோதல்கள் வெடித்துள்ளன.
இஸ்லாமியத்தின் மூன்றாவது புனிதமான தளமான அல்-அக்ஸா மசூதியைக் கொண்ட ஒரு பழைய நகர வளாகத்திற்கு படையினர் சென்றதும், கற்களை வீசிய வழிபாட்டாளர்கள் மீது ஸ்டன் கையெறி குண்டுகளை வீசினர்.
கிழக்கு ஜெருசலேமில் பாலஸ்தீனிய ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலகப் பிரிவு அதிகாரிகள் மோதியதைத் தொடர்ந்து, ஒரே இரவில் 180பேர் காயமடைந்ததாகவும், 50பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பாலஸ்தீனிய ரெட் கிரசண்ட் தெரிவித்துள்ளது. அத்துடன் 20க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய பொலிஸார் காயமடைந்துள்ளனர்.
இதனிடையே ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேம் சுற்றுப்புறமான ஷேக் ஜர்ராவிலிருந்து பாலஸ்தீனிய குடும்பங்களை கட்டாயமாக வெளியேற்றுவதற்கு எதிராக இஸ்ரேலிய படையினர் மீண்டும் அணிதிரண்டதால் ஜெருசலேமில் வன்முறை குறித்து அமெரிக்கா தீவிர கவலை தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை கிழக்கு ஜெருசலேம் முழுவதும் அமைதியான ஆர்ப்பாட்டங்களின் போது ஒரு பாலஸ்தீனிய துணை மருத்துவர் உட்பட குறைந்தது 17பேர் காயமடைந்ததாக பாலஸ்தீனிய செஞ்சிலுவை சங்கம் கூறியதால் வொஷிங்டனில் இருந்து இந்த கண்டனம் வந்தது.
வருடாந்திர ‘ஜெருசலேம் தினம்’ என்று அழைப்பதைக் குறிக்கும் நிகழ்வின் போது, அதிக வன்முறை ஏற்படும் என்ற அச்சம் உள்ளது.
இந்த நிகழ்வு 1967ஆம் ஆண்டில் கிழக்கு ஜெருசலேமை, பழைய நகரம் மற்றும் அதன் புனித தளங்களின் தாயகமாக இஸ்ரேல் கைப்பற்றியதைக் குறிக்கிறது. இது பல பாலஸ்தீனியர்களால் வேண்டுமென்ற ஆத்திரமூட்டும் செயலாக கருதப்படுகிறது.