நாடு முழுவதும் முடக்க கட்டுப்பாடுகளை அறிவிக்கும் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அடுத்த சில நாட்களில் மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை தடையின்றி தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு முப்படையினரை களமிறக்கி நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.
அதன்பிரகாரம் அதிக நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.