மட்டக்களப்பு நகரில் முககவசம் அணியாது கைது செய்யப்பட்டவர்கள் உட்பட எழுமாறாக 110 பேருக்கு இன்று (திங்கட்கிழமை) அன்டிஜன் பரிசோதனையில் காணிசீர்திருத்த ஆணைக்குழு காரியாலயத்தில் கடமையாற்றும் ஒருவர் உட்பட 8 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க வின் வழிகாட்டலில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி பி.கே.ஹெட்டியாராச்சி தலைமையில் பொலிசார் இன்று மட்டக்களப்பு நகரிலுள்ள வர்தகநிலையங்கள், திருகோணமலை வீதியிலுள்ள வர்த்தகநிலையங்கள், கொக்குவில் வாராந்த சந்தை,
மட்டக்களப்பு பொதுச் சந்தை உட்பட பொதுமக்கள் கூடும் பகுதிகளை சுற்றிவளைத்து முகக்கவசம் அணியாத வர்தகர்கள் மற்றும் பொருட்களை கொள்வனவு செய்ய வந்தவர்கள் , வீதிகளில் முககவசம் சரியான முறையில் அணியாது சென்ற சுமார் 55 பேர்வரை கைது செய்து பேருந்துகளில் ஏற்றப்பட்டு காந்தி பூஙகாவிற்கு கொண்டுசெல்லப்பட்டு அவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இதேவேளை கைது செய்யப்பட்ட 55 பேருடன் எழுமாறாக 110 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டதில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலுள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழு காரியாலயத்தில் கடமைபுரியும் ஒருவர் உட்பட 8 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த காரியாலயத்தை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரி தெரிவித்தார்.