நாட்டின் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தவும் நிர்வகிக்கவும் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அமைச்சரவை தீர்மானிக்கும் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (திங்கட்கிழமை) அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
இதன்போது சுகாதார அதிகாரிகள் உட்பட சகல துறையினரும் முன்வைக்கும் திட்டங்கள் குறித்து கவனத்தில் கொள்ளப்படும் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு தரப்பினர் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் முடக்க கட்டுப்பாடுகளை அறிவிக்க கோரியுள்ளனர்.
இருப்பினும் ஒரு சில தரப்பினர் அவ்வாறு முடக்குவதால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பிரச்சினை ஏற்படும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.