அரச சேவையினை தடையின்றி முன்னெடுத்து செல்வது தொடர்பான புதிய சுற்றுநிருபம் இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, அரச ஊழியர்களை கடமைக்கு அழைக்கும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பான விபரங்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
செயலாளர்களுக்கும் நிறுவனத் தலைவர்களுக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை எந்தவித இடையூறும் இல்லாமல் செய்யத் தேவையான குறைந்தபட்ச ஊழியர்களை அழைக்க முடிவு செய்ய அதிகாரம் வழங்கப்படுகிறது.
ஒரு மாற்றம் அல்லது முறையான பட்டியலைப் பின்பற்ற வேண்டும் என்றும் கர்ப்பிணி ஊழியர்களை சேவைக்கு அழைக்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு அதிகாரி கடமைக்கு அழைக்கப்படாதபோதும் அனைத்து அதிகாரிகளும் ஒன்லைனில் கடமைகளைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.