இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.
அந்தவகையில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 29 ஆயிரத்து 517 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 29 இலட்சத்து 91 ஆயிரத்து 927 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் ஒரு கோடியே 90 இலட்சத்து 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மேலும் 37 இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இவ்வாறு சிகிச்சைப் பெற்று வருபவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரம் நேற்று ஒரேநாளில் 3 ஆயிரத்து 879 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.