• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home பல்சுவை
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த நடைப்பயிற்சி உதவுமா?

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த நடைப்பயிற்சி உதவுமா?

Rahul by Rahul
2026/10/06
in பல்சுவை
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

30 வயதை கடந்தவர்கள் தினமும் 30 நிமிடங்கள் நடப்பதை, ஒரு பழக்கமாக மாற்றிக் கொண்டால், அவர்களால் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும் என்பது நம் அனைவருக்குமே தெரிந்ததுதான். ஆனால், தினமும் நடப்பது இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்துமா? உண்மை என்ன? இங்கே தெரிந்துகொள்வோம்.

இப்போதெல்லாம் பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் உடல் உழைப்பின்மையே. அதிலும் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, உணவுப் பழக்க மாற்றங்கள் மற்றும் மன அழுத்தம் போன்ற காரணங்களால் நீரிழிவு நோய் போன்ற பிரச்சனைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. அதனாலேயே தினமும் 30 நிமிடங்கள் நடப்பதை வழக்கமாக்கிக் கொண்டால், உங்கள் உடல்நலம் மேம்படும் என தொடர்ந்து வைத்தியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், தினமும் நடப்பது எந்தெந்த வகையில் பலனளிக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. குறிப்பாக நீரிழிவு அபாயத்தை இது எந்தளவு தடுக்கும் என தெரிவதில்லை.

இதுகுறித்து பேட்டியளித்த நாளமில்லாச் சுரப்பியியல் மற்றும் நீரிழிவு நோய் நிபுணர் பிரணவ் கோடே,

“வழக்கமான நடைப்பயிற்சி என்பது, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். காரணம் நமது உடல் நீண்ட நேரம் செயலற்று இருந்தால், குளுக்கோஸ் சரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை. இதனால் இன்சுலின் எதிர்ப்பு அதிகரித்து, நீரிழிவு நோய் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது. அதுவே, வழக்கமாக நடப்பது என்பது தசைகளைச் சுறுசுறுப்பாக வைத்திருப்பதோடு, ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை ஆற்றலாகப் பயன்படுத்துகிறது. இது இயற்கையாகவே சர்க்கரை அளவைக் குறைக்கிறது” என்கிறார்.

நடைப்பயிற்சியிலேயே வேகமாக நடப்பது அதிக நன்மை பயக்கும். ஏனெனில் இவ்வாறு நடப்பது, உடல் குளுக்கோஸை வேகமாக உறிஞ்சிக்கொள்ள உதவுவதோடு, இன்சுலின் உணர்திறனையும் மேம்படுத்துகிறது. இதன் பொருள், உடலால் குறைந்த இன்சுலினைக் கொண்டே சர்க்கரையைக் கட்டுப்படுத்த முடியும் என்பதாகும். இது வகை 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும், செரிமான அமைப்பையும் மேம்படுத்துகிறது.

பிற நேரங்களை காட்டிலும் சாப்பிட்ட பிறகு நடப்பது மிகவும் நல்லது. இதன் மூலம் சாப்பிட்ட பிறகு ரத்தச் சர்க்கரை அளவு திடீரென உயர்வதைத் தடுக்க உதவுகிறது. ஒருநாளில் வெறும் 10-15 நிமிடங்கள் வேகமாக செய்யும் நடைப்பயிற்சி கூட நல்ல பலனைத் தரும். குடும்பத்தில் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் அல்லது அந்நோய் ஏற்படும் அபாயத்தில் இருப்பவர்களுக்கும் இந்தப் பழக்கம் இன்னும் முக்கியமானது.

வாரத்தின் பெரும்பாலான நாட்களில் குறைந்தது 30 நிமிடங்கள் நடப்பது போதுமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அந்நாட்களில் கடினமான உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டியதுகூட கட்டாயமில்லை. நடைப்பயிற்சியுடன், சமச்சீரான உணவை உண்பதும் அவசியம். பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், அதிக சர்க்கரை உள்ள உணவுகளையும் குறைப்பது நல்லது. மேலும், ஆரோக்கியத்திற்குப் போதுமான தூக்கம் பெறுவதும் இன்றியமையாதது.

ஆகவே, தினமும் நடக்கும் ஒரு சிறிய பழக்கம்கூட நாம் நினைத்திடாத பல நன்மைகளைத் தரும். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, நீரிழிவு அபாயத்தையும் குறைக்கும். மேலும் உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கவும் உதவும். எனவே, இன்றிலிருந்தே நடைப்பயிற்சியை ஒரு பழக்கமாக மாற்றி, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள்.

Related

Tags: Does walking help control blood sugar?
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மீதான சர்வதேச கவலை அதிகரிப்பு!

Related Posts

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!
ஆசிரியர் தெரிவு

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
இருமுடி படத்திற்கு எதிராக ஆந்திர ஆசிரியர்கள் கண்டனம் !
சினிமா

இருமுடி படத்திற்கு எதிராக ஆந்திர ஆசிரியர்கள் கண்டனம் !

2026-08-25
திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரவி மோகன் பேச்சு!
சினிமா

திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரவி மோகன் பேச்சு!

2026-08-24
மோசமான அனிமேஷனால் வைரலாகி பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த குறைந்த பட்ஜெட் சீனத் திரைப்படம்!
உலகம்

மோசமான அனிமேஷனால் வைரலாகி பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த குறைந்த பட்ஜெட் சீனத் திரைப்படம்!

2026-08-18
பிரபல ஹாலிவுட் நடிகை ஹேடன் பனெட்டியர் காலமானார்!
சினிமா

பிரபல ஹாலிவுட் நடிகை ஹேடன் பனெட்டியர் காலமானார்!

2026-08-17
‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்திற்கு குவியும் பாராட்டு!
சினிமா

‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்திற்கு குவியும் பாராட்டு!

2026-08-14

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மீதான சர்வதேச கவலை அதிகரிப்பு!

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மீதான சர்வதேச கவலை அதிகரிப்பு!

0
எரிபொருள் வரிசைகள் ஏன்? நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்த எரிசக்தி அமைச்சர்!

எரிபொருள் வரிசைகள் ஏன்? நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்த எரிசக்தி அமைச்சர்!

0
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த நடைப்பயிற்சி உதவுமா?

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த நடைப்பயிற்சி உதவுமா?

0
நைஜீரிய இராணுவ விமான விபத்தில் 32 பேர் உயிரிழப்பு!

நைஜீரிய இராணுவ விமான விபத்தில் 32 பேர் உயிரிழப்பு!

0
நிறத்தை விமர்சித்தவர்களுக்கு அட்லியின் தரமான பதிலடி!

நிறத்தை விமர்சித்தவர்களுக்கு அட்லியின் தரமான பதிலடி!

0
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த நடைப்பயிற்சி உதவுமா?

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த நடைப்பயிற்சி உதவுமா?

2026-10-06
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மீதான சர்வதேச கவலை அதிகரிப்பு!

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மீதான சர்வதேச கவலை அதிகரிப்பு!

2026-10-06
எரிபொருள் வரிசைகள் ஏன்? நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்த எரிசக்தி அமைச்சர்!

எரிபொருள் வரிசைகள் ஏன்? நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்த எரிசக்தி அமைச்சர்!

2026-10-06
நிறத்தை விமர்சித்தவர்களுக்கு அட்லியின் தரமான பதிலடி!

நிறத்தை விமர்சித்தவர்களுக்கு அட்லியின் தரமான பதிலடி!

2026-10-06
நைஜீரிய இராணுவ விமான விபத்தில் 32 பேர் உயிரிழப்பு!

நைஜீரிய இராணுவ விமான விபத்தில் 32 பேர் உயிரிழப்பு!

2026-10-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: