இங்கிலாந்தில் அடுத்த வாரம் முதல் கொரோனா கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்படும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உறுதியளிப்பர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து அவர் இன்று (திங்கட்கிழமை) புதிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் வீடுகளில் ஆறு பேர் வரை ஒன்று கூடுவதற்கும் சந்திப்புகளை நடத்துவதற்கும் அனுமதி வழங்கப்படும் என கூறப்படுகின்றது.
உட்புற விருந்தோம்பல் நடவடிக்கைகள் மற்றும் அன்பானவர்களை சந்திப்பதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்படும் என அமைச்சர் மைக்கேல் கோவ் அறிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து தொற்று விகிதங்கள் மிகக் குறைந்த மட்டத்தில் உள்ள நிலையில் இங்கிலாந்தில் தடுப்பூசி திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தடுப்பூசி திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதனால் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக பிரதமர் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து அறிவிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.