இரண்டு வயது முதல் 18 வயதிற்கு இடைப்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி சோதனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது குறித்த பாரத் பயோடெக் நிறுவனம் பரிந்துரைத்திருந்த நிலையில், தற்போது மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது தொடர்பில் மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”2 முதல் 18 வயதுடையோருக்கு தடுப்பூசி செலுத்தி இராண்டாம், மூன்றாம் கட்ட பரிசோதனைகளை செய்ய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி முதற்கட்டமாக தன்னார்வலர்களின் 525 குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகளுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் வல்லுநர் குழுவால் பரிசோதனை செய்யப்படவுள்ளது.
சோதனை வெற்றிகரமாக நடந்தால் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடும் பணி நடைபெறும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.