உத்தரகண்ட் மாநிலத்தில் இன்று (திங்கட்கிழமை) கேதார்நாத் கோவில் நடை திறக்கப்படவுள்ளது.
இது குறித்து சார்தம் தேவஸ்தான நிரவாக வாரிய தலைவர் ஹரீஷ் கவுர் கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் வழிபட, பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நிலைமை சீரான பின்னர் சார்தம் யாத்திரையை மேற்கொள்ள பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோடை காலத்தில் மாத்திரமே திறக்கப்படும் இந்த கோவில் குளிர்காலம் துவங்கியதும் மூடப்படும். இந்த கோவிலுக்கு செல்லும் யாத்திரை சார்தம் என அழைக்கப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக குறித்த யாத்திரை செல்வதற்கு உத்தரகாண்ட் மாநில அரசு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.