இஸ்ரேல் குடிமக்களுக்கு அமைதியை கொண்டுவரும் வரை தாக்குதல்கள் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
மோதலை நிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட வரும் சர்வதேச முயற்சிகளுக்கு மத்தியில் பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
‘பயங்கரவாததிற்கு எதிரான எங்களின் நடவடிக்கை முழு வலிமையுடன் தொடரும். இஸ்ரேல் குடிமக்களுக்கு அமைதியை கொண்டு வரும் வரை நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அதற்கு சிறிது காலம் ஆகும்’ என கூறினார்.
இதற்கிடையே ஐநா பாதுகாப்பு சபை கூட்டத்தில், உடனடியாக மோதலை நிறுத்தும் முயற்சியில் அனைத்து தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக ஐநா பொதுச் செயலர் ஆண்டானியோ தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சண்டை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் சண்டையை நிறுத்தும் முயற்சி தீவிரமடைய அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒரு வார காலத்தில் காசா பகுதியில் இருந்து பாலத்தீன ஆயுதக் குழுவினர் தங்கள் பகுதியை நோக்கி 3,000க்கும் அதிகமான ரொக்கெட்டுகளை ஏவித் தாக்கியுள்ளனர் என்று இஸ்ரேல் இராணுவம் கூறுகிறது. அவற்றில் பெரும்பாலானவை நடுவானில் இடைமறித்து அழிக்கப்பட்டன.