இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஆரம்பித்த நாளில் இருந்து இதுவரை 244 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் அதிகபட்சமாக நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். பீகார் மாநிலத்தில் 69 மருத்துவர்களும், உத்தரப்பிரதேசத்தில் 34 மருத்துவர்களும், டெல்லியில் 27 மருத்துவர்களும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தோரில் 3 சதவீதமானோருக்கு மாத்திரமே இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ சங்கம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் தடுப்பூசி வழங்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை ஏறக்குறைய 66 சதவீத மருத்துவ ஊழியர்களுக்கு மாத்திரமே கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.