சிறந்த நடவடிக்கைகளை பின்பற்றினால் தடுப்பூசி வீணாவதை முற்றிலுமாக தடுக்க முடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் காணொலி மூலமாக கலந்துரையாடிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘தடுப்பூசி விநியோகத்தை பெரிய அளவில் அதிகரிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியுலும் தடுப்பூசி திட்டம் தொடர்ந்து செயற்படுத்தப்படும்.
தடுப்பூசி வீணாகுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறந்த நடைமுறைகளை நாம் பின்பற்றினால் தடுப்பூசி வீணாவதை தவிர்க்க முடியும்.
கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் நீங்கள் தான் தலைவர்கள் என்பதால் உங்களது முயற்சிகள் குறைப்பாடு அற்றதாக இருக்க வேண்டும்.
கொரோனாவுக்கு எதிரான போரில் அதிகாரிகள்தான் களப்பணியாளர்களாக உள்ளனர். கொரோனா காலத்தில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம், எதிர்காலத்திலும் கைகொடுக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.