பிரான்ஸ் கால்பந்தில் முதன்மையான நாக் அவுட் கிண்ண போட்டித் தொடரான, பிரான்ஸ் கிண்ண கால்பந்து தொடரில், பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
ஒவ்வொரு ஆண்டு நடைபெறும் இந்த போட்டித்தொடரின், நடப்பு ஆண்டுக்கான இறுதிப் போட்டி உள்ளூர் நேரப்படி இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.
ஸ்டேட் டி பிரான்ஸ் விளையாட்ரங்கில் நடைபெற்ற எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணியும் மொனாகோ அணியும் பலப்பரீட்சை நடத்தின.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி 2-0 என்ற கோல்கள் வெற்றிபெற்றது.
இதில் பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி சார்பில், மயுரோ இகார்டி போட்டியின் 19ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் கிளியன் எம்பாப்வே 81ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.
பிரான்ஸ் கிண்ண கால்பந்து தொடரில், அதிகப்பட்சமாக பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி 13முறை சம்பியன் பட்டத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.