ஒத்திவைக்கப்பட்ட ஆறாவது பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடர், அபுதாபியில் நடைபெறவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இதற்கு ஐக்கிய அரபு அமீரகத்திடம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அனுமதி கோரியிருந்த நிலையில், இதற்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொடரை நடத்துவதற்கு கொரோனா தொடர்பான நடைமுறையில் உள்ள சிலவற்றிற்கு விலக்கு அளித்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் வரும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது
பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடர், கடந்த மார்ச் 4ஆம் திகதி முடிவெடுக்கப்பட்டது. இதன்போது 34 போட்டிகளில் 14 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அனைத்து போட்டிகளும் கராச்சி மற்றும் லாகூரில் நடைபெற இருந்தன. முதல் 20 போட்டிகள் கராச்சியிலும் மீதமுள்ள 10 லீக் போட்டிகளும் நான்கு பிளே ஒஃப் போட்டிகளும் லாகூரில் நடைபெற இருந்தன.
கொரோனா பாதுகாப்பு வளையத்தில் அணியின் வீரர்களும் பயிற்சியாளர்களும் இருந்தபோதும் ஏழு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். இதில் ஆறு பேர் வீரர்கள். இதனால் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது தொடரை நடத்துவதற்கான பணிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முன்னெடுத்து வருகின்ற நிலையில், மீதமுள்ள 20 போட்டிகளும் எப்போது நடைபெறும் என்பதை விரைவில் அறிவிக்கவுள்ளது.