மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக உருமாறியுள்ளது.
இதற்கு யாஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளதுடன், இந்த புயல் ஒடிசாவின் பாரதீப்பில் இருந்து 540 கிலோ மீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் குறித்த புயலானது எதிர்வரும் 26 ஆம் திகதி ஒடிசா – மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தள்ளது.
அந்தமான் கடல் பகுதியில் உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, பின் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறியிருந்தது. பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.