மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, 21.80 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது.
இதன்படி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தமாக 1 கோடியே 99 இலட்சத்து 31 ஆயிரத்து 577 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சுமார் 1.90 கோடி தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளதாகவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.
அதேநேரம் அடுத்த 3 நாட்களில், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் ஏறத்தாழ 40 ஆயிரத்து 650 தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு கூடுதலாக வழங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.