இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் சற்று தற்காலிகமாக தணிந்துள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேலுக்கு செல்லவுள்ளார்.
எதிர்வரும் புதன்கிழை இஸ்ரேல் செல்ல உள்ள அவர், வியாழக்கிழமை பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதிக்குச் செல்கிறார்.
இந்தப் பயணத்தின்போது இரு தரப்பு தலைவர்களையும் சந்தித்து பதற்றத்தைக் குறைக்க பேச்சுவார்த்தை நடத்துவார் என நம்பப்படுகிற்து.
இந்தப் பயணத்தின்போது இரு தரப்பு தலைவர்களையும் சந்தித்து பதற்றத்தைக் குறைக்க பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், இந்தப் பயணத்தின் போது ஆண்டனி பிளிங்கன், எகிப்து மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான மோதல் 11 நாட்களுக்கு பிறகு முடிவுக்கு வந்துள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்தப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருத்தப்படுகிறது.