சீனாவில் பெய்த ஆலங்கட்டி மழை மற்றும் வேகமான காற்றில் சிக்கி, மரத்தன் ஓட்டப் பந்தய வீரர்கள் 21பேர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவ இடத்தில் நடைபெற்ற மீட்புப் பணி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த நிலையில், உயிரிழந்த 21 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புப் பணி தலைமையகம் தெரிவித்துள்ளது.
போட்டியில் பங்கேற்ற மற்ற 172 பேரில் 8 பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு சீனாவில் உள்ள கன்ஷு மாகாணத்தில் மலைப் பகுதியில் 100 கி.மீ. தொலைவு மரத்தன் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
போட்டி ஆரம்பமாகும் போது வெயில் இருந்ததாகவும் திடீரென காலநிலை மாறியதாகவும் பெயின் நகர மேயர் சாங் சுச்சென் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் காரணம் குறித்து மேலும் ஆராய்வதற்காக ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.