ஆதிபுருஷ் திரைப்படத்திற்காக நடிகர் பிரபாஸ் உடல் எடையை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக கொண்டு உருவாகி வருகின்ற இந்த திரைப்படத்தை ஓம் ராவத் இயக்குகிறார்.
ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்படவுள்ளது.
இராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கும் அதேவேளை, சீதையாக கீர்த்தி சனோனும், இராவணனாக பிரபல பொலிவுட் நடிகர் சையிப் அலிகானும் நடிக்கின்றனர்.
இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் சன்னி சிங், பிரபாஸ் இந்த திரைப்படத்திற்காக உடல் எடையை அதிகரித்து வருகிறார். கைகளின் தசைகளை வலுவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்’ எனத் தெரிவித்துள்ளார்.