நுவரெலியா மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 167 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி அக்கரபத்தனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 26 பேருக்கும் பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேருக்கும் டயகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 31 பேருக்கும் திம்புள்ள பத்தன சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் ஹங்குராங்கெத்த சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், ஹட்டன் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேருக்கும் கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூவருக்கும் நானுஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும்,நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 32 பேருக்கும் பூண்டுலோயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூவருக்கும் வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.