கங்கை நதியில் சடலங்கள் மிதந்து வந்தமைக்கு மத்திய அரசுதான் காரணம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இறந்த உடல்களின் படங்களைப் பகிர்வதை நான் விரும்பவில்லை. இந்த ஒட்டுமொத்த உலகமும் நாடும், அத்தகைய படங்களை பார்த்து சோகத்தில் உள்ளன.
வேறு வழி இல்லாமல் கங்கை நதியோரம் தங்களது குடும்ப உறுப்பினர்களின் உடல்களை விட்டுச் சென்றவர்களின் வலியை புரிந்துக்கொள்ள வேண்டும்.
இது அவர்களின் தவறல்ல. இது அனைவரும் பொறுப்பேற்க வேண்டிய விடயம் அல்ல. மத்திய அரசு மட்டுமே பொறுப்பேற்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.